Header Ads

  • சற்று முன்

    நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம்... 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாள் தொடர் போராட்டம்..

     

     


    மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் செயலை காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில்  கடந்த ஆகஸ்ட்  மாத, 20ம் தேதி காங்கிரஸ் கட்சியின்  தலைவர் சோனியா காந்தி தலைமையில்  எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி  , மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, மஹாராஷ்டிர முதலமைச்சர்  உத்தவ் தாக்கரே , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்தக்கூட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து செப்டம்பர் 20 (இன்று ) முதல் செப்.30 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி வேளாண் சாட்டங்களை ரத்து செய்தல், பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அரசு சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது, வெளிப்படைத்தன்மையுடன் தேர்தலை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.


     

    போராட்டம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டதை அடுத்து, அந்தந்த மாநிலங்களிம் சூழலுக்கு ஏற்ப போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்ட தலைநகரங்களில் போராட்டமும், கட்சியினரின் வீடுகளில் கருப்புக் கொடிகள் கட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad