Header Ads

  • சற்று முன்

    பயனர்களின் தரவுகளை பகிர்ந்த வாட்ஸ் ஆப்... ரூ.1949 கோடி அபராதம்..


     

     

    உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் செயலி   வாட்ஸ் ஆப்.  குறுஞ்செய்திகள், தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை  உலகில் எந்த மூலையில் இருக்கும் உறவுகளுடனும் பகிர்ந்துகொள்ள  பெருமளவில் உதவும் வாட்ஸ் ஆப், பாதுகாப்பானதா என்ற கேள்வியும் அவ்வப்போது எழுந்து கொண்டே   இருக்கிறது. 

     

    அதற்கு காரணம் வாட்ஸ் ஆப் நிறுவனம்,  பயனாளர்களின் தரவுகளை விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில்   கடந்த 2018 ஆம் ஆண்டு பாதுகாப்பு விதிகளை மீறி,  வாட்ச் ஆப் நிறுவனம் அயர்லாந்து  நாட்டு மக்களின் தரவுகளை விற்றதாக குற்றச்சாட்டு  எழுந்தது. 

     

    இது தொடர்பான  விசாரணையில்  வாட்ஸ் ஆப் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.  பயனாளர்களின் தரவுகளை ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பகிர்ந்த குற்றத்திற்காக, வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில்  1949 கோடி ரூபாயை அயர்லாந்து அரசு அபராதமாக வித்தித்துள்ளது. 

     

    மேலும், பயனாளர்களின் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் அயர்லாந்து  அரசு வித்துள்ள அபராதத்திற்கு எதிராக அந்நிறுவனம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad