Header Ads

  • சற்று முன்

    கள்ளக்குறிச்சி : 2 நாட்களில் 5 குழந்தைகள் உயிரிழப்பு.. அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட மக்கள்..

     


    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஒவ்வொரு நாளும் ஏராளமான உள் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பல கிராம மக்கள் இந்த மருத்துவமனையையே நம்பியிருக்கின்றனர். அந்தவகையில் பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மகப்பேறு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வருவதுண்டு. 

    இங்கு நாள் ஒன்றுக்கு 20க்கும் மேற்பட்ட மகப்பேறு சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 5 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் , குழந்தைகள் உயிரிழப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை எனவும், சில நேரங்களில் அலட்சியமாக பதில் கூறுவதாகவும் தெரிவித்துள்ளனர். 


     

    இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 





    No comments

    Post Top Ad

    Post Bottom Ad