Header Ads

  • சற்று முன்

    இனி கன்டெண்ட்க்கு பஞ்சமில்லை.. அக்.3 ஆம் தேதி ஆரம்பமாகிறது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி..

     


    பிக்பாஸ் தமிழ் மட்டுமின்றி  ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி. இந்தியில் இந்த நிகழ்ச்சி 14 சீசன்களை எட்டியிருக்கிறது. தமிழில் 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 5வது சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து  வந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த சீசனை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

    இது ஒருபுறமிருக்க நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. குக் வித் கோமாளி புகழ் கனி, விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா, ஷகிலாவின் மகள் மிளா ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


     

    கடந்த சில நாட்களுக்கு முன்  5 வது சீசனுக்கான ப்ரோமோ வெளியானது. அதன் பின் வெளியான 3 ப்ரோமோக்களும் வேற லெவெல் என்கிற வகையில் அசத்தலாக இருந்தது. இந்த சீசனுக்காக காத்திருக்கும் ரசிகர்களை மேலும் எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறது. 

    இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சி கூடுதல் சிறப்பம்சங்களுடன் இருக்கும் என எதிப்பார்க்கபடுகிறது. ஏனெனில் பிக்பாஸ் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில், சன் டிவியில் :,மாஸ்டர்செஃப், ஜீ தமிழில் “சர்வைவர்” நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. 

    இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால்  பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பியை எட்ட கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad