Header Ads

  • சற்று முன்

    5 சவரனுக்கு கீழ் இருந்தாலும் நகைக்கடன் வசூல் செய்ய உத்தரவு...

     


    கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியமைத்த பின்னர் இதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என பலரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

    மேலும் ஏழைகள் மட்டுமே பயன்பெற வேண்டும் என்கிற நோக்கில்  பல்வேறு பகுப்பாய்வுகள் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.  அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடமானம் வைத்திருப்பவர்களின் விவரங்களை தமிழக அரசு கோரியிருந்தது. அந்தவகையில் கடந்த மார்ச் 31 - ஜூலை 31 வரையிலான நிலுவை விவரங்களை சேகரித்தது. 

    இந்நிலையில் தற்போது நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான விவரமான வழிமுறைகள்  வெளியாகியுள்ளது.  அதில் 5 சவரனுக்கு மேற்பட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடமிருந்து கடன் தொகையை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கூட்டுறவு மண்டல மேலாண் இயக்குனர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

     நகைக்கடன் தவணை தவறி இருந்தாலும் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு கடன்களை வசூலிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.. அதாவது, 2021 ஆம் ஆண்டு பயிர்க்கடன் பெற்றவர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஒரு கூட்டுறவு வங்கியிலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்கள் மூலம் (தனித்தனியே கடன் பெறுதல்) 5 சவரனுக்கும் மேல் நகை ஈட்டின் பேரில் கடன் பெற்றவர்கள், தவறாக குடும்ப அட்டை பெற்று அவற்றை பயன்படுத்தி கடன்பெற்றவர்கள் போன்றவர்களுக்கு கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது என ஏற்கெனவே அரசு அறிவித்திருந்தது. 

    அதனால், தமிழக அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வங்கிகளில், 5 சவரனுக்கும் மேல்  கடன் பெற்றவர்களின் விபரங்கள்  சேகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு (ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தனியே 5 சவரன் நகை வைத்து கடன்பெறுதல் )நகைக்கடன் பெற்றவர்களிடமிருந்து, கடன் தொகையை வசூல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது..


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad