Header Ads

  • சற்று முன்

    முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை - அவருடைய கணவர் பாபுவும் சிறைக்கு செல்கிறார். சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

     

    கடந்த 1991 -1996 அதிமுக ஆட்சியின்போது இலவச  வேஷ்டி > சேலை > பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச செருப்பு வழங்கியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர்  இந்திரகுமாரி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

         இந்நிலையில் இந்திரகுமாரி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1997ம் ஆண்டு சமூக நலத்துறையின் செயலாளராக லட்சுமி பிரானேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

      அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐ.ஏ.எஸ். ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐ.ஏ.எஸ். இந்திரகுமாரியின் கணவரும் > வழக்கறிஞருமான பாபு> இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



          இந்த வழக்கில் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிக்கையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்தனர். அதில்> ஊழல் செய்யும் நோக்கத்தில் 1992-96ம் ஆண்டுகளில் பாபுவை நிர்வாக அறங்காவலராக ஏற்படுத்தி "மெர்சி மதர் இந்தியா" என்ற அறக்கட்டளையும் "பரணி சுவாதி" என்ற பெயரில் கல்வி அறக்கட்டளையும் தொடங்கி> அரசிடம் பணம் பெற்றனர். காது கேளாதோர் பள்ளியும்>  ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறி அரசுப்பணத்தில் ரூ.15.45லட்சம் மோசடி செய்துள்ளனர். இந்திரகுமாரி> கிருபாகரன்>சண்முகம் ஆகியோர் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளனர்.

    இவர்கள் செய்த ஊழலுக்கு பாபு> வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்ததால் இவர்களை அனைவரையும் இந்திய தண்டனைச்சட்டம்> ஊழல் தடுப்புச்சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

         பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி> அவருடைய கணவர்.பாபு மற்றும் சன்முகம் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை என்று நீதிபதி அலிசியா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad