Header Ads

  • சற்று முன்

    அடுத்தடுத்து 6 ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. மிஷினை உடைக்க முடியாமல் போலீஸில் சரணடைந்த நபர்..

     

    சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர், பிரகாஷ் நகர் பகுதியில் வசித்து வருபவர் சேஷாத்ரி. 49 வயதான அவர் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வருமானம் இன்றி தவித்து வந்துள்ளார். இதனால் கடந்த சில தினங்களாகவே சேஷாத்ரி  மன உலைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

     இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த சேஷாத்ரி, ஏடிஎம்மில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். கையில் சுத்தியலை எடுத்துக்கொண்டு திருநின்றவூர் பகுதியில் சிடிஹெச் சாலையில்  அமைந்துள்ள ஏடிஎம்களை உடைத்து கொள்ளையடிக்கவும்  முயன்றுளார். SBI வங்கி, CANARA வங்கி , AXIS வங்கி என அடுத்தடுத்து 6 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்திருக்கிறார். 



    இருப்பினும் ஒரு இயந்திரத்தைக் கூட உடைக்க முடியாததால், சுத்தியலுடன் திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.  சேஷாத்ரி இந்த செயலை திட்டமிட்டு செய்தாரா அல்லது  மனநலம் பாதிக்கப்பட்டு செய்தாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad