Header Ads

  • சற்று முன்

    9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் 2,981 பேர் போட்டியின்றி தேர்வு..

     


    தமிழ்நாட்டில் வேலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்  உள்ளிட்ட விடுபட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி மாலை 5 மணி வரை அனுமதிக்கப்பட்டது. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான  கடைசி நாள் செப்டம்பர்  25ஆம் தேதி ( நேற்று ) என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் உள்ள 23,998  பணியிடங்களுக்கு  79,433 பேர் போட்டியிடுகின்றனர். 14,571 பேர் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர். 

    இதில் 2,981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad