Header Ads

  • சற்று முன்

    ஃபோர்டு கார் தொழிற்சாலை தமிழ்நாட்டை விட்டு கிளம்பியது. முதலமைச்சர் தீவிர ஆலோசனை

     போர்டு நிறுவனம் உற்பத்தியை நிறுத்தி தமிழ்நாட்டை விட்டு கிளம்புவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    ஃபோர்டு நிறுவனத்தில் 2800 நிரந்தர தொழிலாளர்கள், 1500 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனம் கார் உற்பத்தியை நிறுத்திவிட்டு கிளம்புவதால் அங்கு பணிப்புரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர், தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

    நான்காயிரம் தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்தும், அதுமட்டுமில்லாமல் 350 ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும் அந்த நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய மத்தியஸ்தம் செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad