Header Ads

  • சற்று முன்

    சென்னைத் தமிழில் கலக்கிய லூஸ் மோகனை நினைவு கொள்வோம்...

     

    ஆறுமுகம் மோகனசுந்தரம் என்ற இயற்பெயரை கொண்டவர், திரைத்துறையில் லூஸ் மோகனாக மாறினார்.

    ஆரம்ப காலத்தில் ராமநாராயணன் படங்களில் நடித்து பெயர் பெற்ற லூஸ் மோகன் இறுதிக் காலத்தில் வறுமையில் வாடி மறைந்தார்.

    ஆயிரத்திற்கும் மேற்பட்டத் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் லூஸ் மோகன் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் மோகனசுந்தரம்.

    மேடை நாடகங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சென்னைத் தமிழில் சரளமாகப் பேசி நடித்ததால் பிரபலமானார் லூஸ் மோகன். 


    எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்த லூஸ் மோகன் 80களில் எப்படியோ ஒரு சில படங்களில் சின்ன சின்ன காமெடி ரோலில் நடித்தார். கண்களை சிமிட்டி சிமிட்டி இவர் பேசும் சென்னை தமிழ் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

    லூஸ் மோகனின் நடிப்புத் திறமையைப் பார்த்து வியந்துபோன,  பிரமாண்ட தயாரிப்பாளர் ராமநாராயணன், தனது அடுத்தடுத்த படங்களில் லூஸ் மோகனை நடிக்கவைத்தார். ராமநாராயணன் ஆதரவால் லூஸ் மோகன் மார்க்கெட் சூடு பிடித்தது.

    90களில் இவர் காட்டில் மழை தான். லூஸ் மோகன் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான படங்களில் நடித்தார். அடுத்தடுத்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பணம், பொருள் ஈட்டினார்.

    1928ல் பிறந்த அவருக்கு வயதாகத் தொடங்கியது. அவர் வாங்கிய சொத்துக்கள், பொருட்கள் அனைத்தையும் வாரிசுகளின் பெயரிலேயே வாங்கினார். இறுதிக் காலத்தில் பணம், காசு இன்றி வறுமையில் வாடினார்.

    வயது மூப்பின் காரணமாக 2012 செப்டம்பர் மாதம் இதே நாளில் தன்னுடைய 84வது வயதில் உயிரிழந்தார் லூஸ் மோகன்.  அவர் மறைந்தாலும் அவருடைய நகைச்சுவை இன்னும் சினிமா ரசிகர்களிடம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad