Header Ads

  • சற்று முன்

    ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிக்க வேண்டும்.. இறையன்பு ஐஏஎஸ் கடிதம்

    வடகிழக்கு பருவ மழையின் போது பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிக்கும் வகையில் புதிய நீர்நிலைகளையும், நீர் ஆதாரங்களை மேம்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு  தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

    மழை நீரை சேமிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தில், கிராமப்புறங்களில் மழைநீரைச் சேகரிப்பதற்கும், வெள்ளத்தைத் தடுப்பதற்கும் பாரம்பரியான  கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். மழை நீரை சேமிப்பது வெறும் நீரை மறு சுழற்சி செய்வது மட்டுமல்ல, எதிர்காலத்தில் நீரை பயன்படுத்துவதற்கும் தான் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்  கிராமபுற மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம்  இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும் செயல்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில், 30 நாட்களில் குறுகிய காலத்தில் 1121 பண்ணை குளங்கள் MGNREGS கீழ் கட்டப்பட்டு சாதனை செய்துள்ளனர். இது தனித்துவமான முயற்சி என்று பாராட்டியுள்ளார். 


    மழையின் ஒவ்வொரு சொட்டு நீர் எங்கு எப்போது விழுந்தாலும் சேமிக்கும் வகையிலான இயக்கத்தை மாவட்ட ஆட்சியர்கள் முன்னெடுக்கவேண்டும் என்றும்,  இதற்கு நீர் ஆதாரங்களான குளம்,குட்டை அனைத்தையும் தூர்வாரி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தயாராக வைக்கும் படி தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார் .

    "நீர்இன்று அமையாது உலகெனின் யார்யாருக்கும் வான்நின்று அமையாது ஒழுக்கு" என்று திருக்குறளை சுட்டிக்காட்டியுள்ள தலைமைச்செயலாளர், புதிய நீர்நிலைகளை சிறப்பு திட்டங்கள் மூலம் உருவாக்கி, வடகிழக்கு பருவமழையின் ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க மாவட்ட ஆட்சிகளுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad