Header Ads

  • சற்று முன்

    பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் சரன்ஜித் சிங்



    பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸும், அகாலி தளம் கட்சியும்  மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன. கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் காங்கிரஸ்  தனது செல்வாக்கை  நிலைநாட்டி ஆட்சியை பிடித்தது. அதன்பின் அம்ரிந்தர் சிங் முதலமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.  சுமார் நாம்கரை ஆண்டுகள்  சுமூகமாக  ஆட்சி செய்துவந்த அம்ரிந்தர் நேற்றி முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார். 

    தான் அவமானப்படுத்தப்பட்டதால், மன அழுத்தத்தில் பதவி விலகுவதாக அம்ரிந்தர் சிங் தெரிவித்திருந்தார். அதன் பின்  பஞ்சாப் மாநில முதல்வர் பதவிக்கு பலருடைய பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டன. இறுதியாக  சாம்கூர் சட்டமன்ற தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சரன்ஜித்  சிங் முதலமைச்சராக முடிவு செய்யப்பட்டார். 


     

    அதன்படி நேற்று ஆளுநரைச் சந்தித்து  பதவியேற்க  கோரிக்கை வைத்ததை அடுத்து, இன்று காலை 11 மணிக்கு பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.  அதன்படி சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் சரன்ஜித் சிங், காலை 11 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பஞ்சாப் மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.. 

    பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ராகுல்காந்தி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவோஜித் சிங் சித்து ஆகியோர் புதிய முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad