Header Ads

  • சற்று முன்

    வயதான தன் ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் மோகன்லால்...


     

    மலையாள திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர்  நடிகர் மோகன்லால். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் 340 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார். 

    ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள மோகன்லால், கலகலப்பான மனிதரும் கூட.. இவர் தற்போது தனது ரசிகை ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி  கொடுத்திருக்கிறார். கேரளாவின் புன்குன்னம் பகுதியில் இருக்கும் முதியோர் இல்லத்தில் வசித்து வரும் ருக்மிணி அம்மாள் என்பவருக்கு அந்த இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். 


     

    ருக்மிணி அம்மாள் , மோகன்லாலின் தீவிர ரசிகையாம்.. அவரது பெயரை வைத்து பலரும்  ருக்மிணி அம்மவை கிண்டல் செய்வதாகவும், ஆனால் மோகன்லால் அவர்களை சந்திக்க முடியவில்லை என்றும் அவர் பேசி அழுத வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது.

     இதனையடுத்து மோகன்லால், ருக்மிணி அம்மாளை வீடியோ காலில் அழைத்து பேசியிருக்கிறார். அவரை நலம் விசாரித்த மோகன்லால், அவரது வயது என்ன என்றும், ஏன் வீடியோவில் அழுதீர்கள் என்றும் கேட்டுள்ளார். அதற்கு தங்களை சந்திக்க வேண்டும் என்று ருக்மிணி அம்மா கூற, கொரோனா பிரச்சணை முடிந்ததும் நிச்சயம் வந்து சந்திப்பதாக தெரிவித்தார். இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad