Header Ads

  • சற்று முன்

    பொங்கலுக்கு ரிலீஸாகும் அஜித்தின் வலிமை திரைப்படம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

     


     இயக்குநர் ஹெச்.வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’ . நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் வலிமை படம் மூலம் இணைந்திருக்கிறது. இந்தப்படத்தில் நடிகை ஹீமா குரேஷி, நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    கடந்த ஆண்டே முடிவடைந்திருக்க வேண்டிய வலிமை திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, படப்பிடிப்புகள் தள்ளிப்போனது. சென்னை , ஹைதராபாத் , இறுதியாக ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர். தற்போது இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

    வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படம் தீபாவளிக்கு அதிரடியாக வெடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட சூழலில், பொங்கலுக்கு விருந்து படைக்கும் என படக்குழு அறிவித்துள்ளது. வலிமை படத்தின் டீசர் நாளை வெளியாகும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், படத்தின் சில வினாடி வீடியோ மட்டும்  வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. 

     

    இந்நிலையில் வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையின்போது, திரையரங்கில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் ட்விட்டரில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அஜித் ரசிகர்கள் #valimaiGlimpse என்ற ஹேஷ்டேகை பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad