Header Ads

  • சற்று முன்

    ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியைக் குத்திக் கொன்ற காதலன்....

     


     

    சென்னை குரோம்பேட்டை, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா. இவர்  தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில், மெடிக்கல் லேப் டெக்னீஷியன் பாடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில்  இன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து, பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். விசாரணையில் அவர் பெயர் ராமன் என்று தெரியவந்துள்ளது. 

    ஸ்வேதாவும், ராமனும் காதலித்து வந்ததாக தெரிகிறது. சமீப காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று இருவரும் தாம்பரம் ரயில் நிலையம் அருகே சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிப்போகவே, ராமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவை சரமாரியாக குத்தியுள்ளார். 

    பலத்த காயமடைந்த ஸ்வேதா குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியுற்ற அப்பகுதி மக்கள், ராமனை பிடித்து அடித்து உதைத்து போலீஸிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினரிடம் பிடிபட்ட பின்னர், ராமன் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் காயமடைந்த ராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ரயில் நிலையம் அருகிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad