Header Ads

  • சற்று முன்

    சிறுமிகளை கடத்துகிறாரா சிவகார்த்திகேயன் ?? - எதிர்ப்பார்ப்பை தூண்டும் டாக்டர் ட்ரெய்லர்...

     


    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வருகிறார். அதிலும் குழந்தைகளுக்கு ஃபேவரைட் ஹீரோவாகி இருக்கிறார். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். விணை, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.  



    அனிரூத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில், ஏற்கெனவே ‘செல்லம்மா செல்லம்மா ‘ மற்றும் ‘சோ பேபி’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. ’டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில்,  படக்குழு திரையரங்கில் தான் வெளியாகும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

     அக்டோபர்  9 ஆம் தேதி இப்படம் தியேட்டரில் ரிலீஸாகும் எனத் தெரிவித்துள்ளது.   இந்நிலையில் இன்று டாக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.  அதில் மருத்துவரான சிவக்கார்த்திகேயன், குடும்பம் போன்று சிலரை நடிக்கச் செய்து, சிறுமிகளை கடத்துவது போல காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது. மாஸாக ரிலீஸாகியிருக்கும் ட்ரெய்லர் படத்தின் எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறது.  

     


     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad