Header Ads

  • சற்று முன்

    மனைவி தூக்கிட்டு சாவதை வீடியோ எடுத்த கணவன்..

     

     


     ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அருகே உள்ள ஆத்மகூர் பகுதியில் வசித்து வருபவர் பெஞ்சாலையா. இவரது மனைவி பெயர் கொண்டம்மா(29) .. இந்த தம்பத்திக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கொண்டம்மாவிற்கு திருமணத்திற்கு மீறிய தகாத உறவு இருப்பதாக பெஞ்சாலையா சந்தேகம் கொண்டிருக்கிறார். இதனால் தொடர்ந்து அவர் தன் மனைவியை கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

    கணவரின் கொடுமையால்  மன உலைச்சலில் இருந்த கொண்டம்மா, தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் முன்னிலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள துணிந்திருக்கிறார். ஃபேனில் தனது புடவையை மாட்டி அதில் தூக்கிட்டு தற்கொலையும் செய்து கொண்டார். இதில் அதிர்ச்சி சம்பவம் என்னவென்றால், காப்பாற்ற வேண்டிய கணவரே அதை வீடியோ எடுத்து ரசித்தது தான். 

    கொண்டம்மா, ஃபேனில் புடவையை மாட்டியது முதல், தூக்கிட்டு துடிதுடித்து சாமும் வரை, அவரைக் காப்பாற்றாமல் கணவர் பெஞ்சாலையா வீடியோ எடுத்திருக்கிறார். பின்னர் அந்த வீடியோவையும்  அவரது உறவினர்களுக்கு அனுப்பியிருக்கிறார். இதுகுறித்து  கொண்டம்மாவின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், ஆத்னகூர் காவல்துறையினர் பெஞ்சாலையாவை  கைது செய்துள்ளனர்.

     

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad