Header Ads

  • சற்று முன்

    சிங்கம் படத்தின் வில்லன் கைது

     




    சினிமாவில் போதைப்பொருள் கடத்தியவர் உண்மையில் போதை பொருள் கடத்தி கைது.

    போதைப் பொருள் கடத்தல் காரனாக நடித்த நைஜீரிய நாட்டை சேர்ந்த நடிகர் பெங்களூருவில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டபோது கைது.

    நைஜீரிய நாட்டை சேர்ந்த காக்விம் மால்வின் சிங்கம் படத்தில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஆக நடித்தவர் உடன் கடத்தல்காரனாக நடித்துள்ளார். சிங்கம் படம் மட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தான் நடித்த கதாபாத்திரங்களில் பெரும்பாலும் வில்லனாக அதிலும் குறிப்பாக போதைப்பொருள் கடத்தல்காரனாகவே நடித்துள்ளார். சில ஆண்டுகள் நடிப்பின் மீது கொண்ட காதல் காரணமாக மும்பையில் நியூயார்க் பிலிம் அகாடமியில் சினிமா குறித்து படித்த பிறகு சில வருடமாக பெங்களூருவில் தங்கியிருந்து தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பு தொழில் மூலமாக போதிய வருமானம் கிடைக்காத நிலையில் உண்மையாக போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்துவந்துள்ளார். 


            கல்லூரி மாணவர்களுக்கு அதிகபடியாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார் காக்விம். சில வாரங்களுக்கு முன்பு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட போதை பொருள் கடத்தல் கும்பல் சினிமா பெயரை பயன்படுத்தி காக்விம் மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.


     இதையடுத்து கே.ஜி. ஹள்ளி காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை செய்ததில் அவரிடம் இருந்து எம்.டி‌.எம்.ஏ போதைப் பொருட்களும் 8 லட்சம் மதிப்புள்ள ஹாசிஸ் என்ற கஞ்சா எண்ணெயும் அவரிடம் இருந்துகைப்பற்றப்பட்டது. 5,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அவரது கைபேசியை காவல்துறையினர் போதைப் பொருட்களுடன் சேர்ந்து கைப்பற்றியுள்ளனர். சினிமாவில் கடத்தல்காரனாக நடிந்த நபர் உண்மையில் போதைப்பொருள் கடத்தல்காரன் ஆக உருமாறி காவல்துறையிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் சினிமா பிரபலங்களும் தொடர்பில் இருந்து போதை பொருள் வாங்கி வந்தார்களா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad