Header Ads

  • சற்று முன்

    இந்திய கிரிக்கெட் அணியின் சர் வதேச போட்டிகளின் பட்டியல் வெளியீடு..

     


    இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த ஆண்டு வரையிலான சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

    டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நவம்பர் 14 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  அதனைத் தொடர்ந்து  அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான சர்வதேச போட்டிகளின் பட்டியல் இன்று ( திங்கள் கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. அதில் நியூஸிலாந்துடன் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் உள்ளன. 

    மேலும்,  வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 3  ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்கள் நடைபெறவுள்ளன. அதனைத்தொடர்ந்து  இலங்கையுடன்  இரண்டு டெஸ்ட் தொடர்கள் மற்றும் 3 டி20 தொடர்களும்,  இறுதியாக ஜூன் மாதம் தென் ஆப்ரிக்காவுடன்  5 ஆட்டங்கள்  கொண்ட  டி20 தொடர் வரையிலான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.



     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad