Header Ads

  • சற்று முன்

    இனி கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் - முதலமைச்சரின் அசத்தல் திட்டம்...

     




    தமிழக திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதற்காக அன்னதானத் திட்டம் 2002ம் ஆண்டு தொடக்கி வைக்கப்பட்டது. அதன்படி, மதியவேளை உணவு 754 திருக்கோயில்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி மற்றும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், இந்த திட்டம் மற்ற கோயில்களுக்கும்  விரிவுபடுத்தப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் இதனை அவர் தெரிவித்திருந்தார்.

    அதன்படி, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் மற்றும் திருத்தணி முருகன் கோயில் ஆகிய 3 கோயில்களிலும் முழு நேர அன்னதான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad