Header Ads

  • சற்று முன்

    மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - ஏமாந்துபோன முக்கிய நிர்வாகிகள்... !!


     

    தமிழகத்தில் காலியாகவுள்ள  2 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு திமுக  சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

     ஏற்கெனவே மாநிலங்களவை  உறுப்பினர்களாக இருந்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர்,  நடந்து  முடிந்த  சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனையடுத்து  இருவரும் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதனால் மாநிலங்களவையில்  இரண்டு உறுப்பினர்களுக்கான பதவி காலியாக அறிவிக்கப்பட்டது. 

    மேலும் அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் 2 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலர் இருக்கும் பட்சத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு, திமுகவினரை சற்று ஏமாற்றமடையச் செய்துள்ளது. 


     

    ஆம், மறைந்த மூத்த தலைவர் என்.வி.என். சோமு அவர்களின் மகள் டாக்டர் கனிமொழி மற்றும் நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேந்திரன் ஆகிய இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் டாக்டர் கனிமொழி, 2016 ஆம் ஆண்டு தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கெனவே காலியாக இருந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட, திமுக வேட்பாளார் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் போட்டியின்றியே தேர்வு செய்யபடுவார்கள் எனவும் எதிர்ப்பார்க்கபடுகிறது. இதன் மூலம் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தப் பதவிக்காக காத்திருந்த பல திமுக நிர்வாகிகள் ஏமாற்றமடைந்தனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad