Header Ads

  • சற்று முன்

    தெற்கு ரயில்வே பணியில் சேர்வதற்கு காத்திருந்த வடமாநிலத்தவர் திருப்பி அனுப்பப்பட்டனர் - வெங்கடேசன் எம்.பி. பணி பாராட்டுக்குரியது.

     

    தெற்கு ரயில்வே பணிக்கு வடக்கு ரயில்வே பணியாளர்களின் பட்டியலை மீண்டும் வடக்கு ரயில்வே-க்கு அனுப்பி வைக்கப்பட்டது - சு.வெங்கடேசன் எம்.பி வரவேற்பு.


          உத்தரப் பிரதேச மாநிலம்  கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 54 விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குறியது எனவும் , உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும் என மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் கடந்த 25ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார்.  இந்நிலையில், தெற்கு ரயில்வே வாரியம் எம்.பி-யின் கோரிகைகை ஏற்று கோரக்பூர் தேர்வாளர் பட்டியலை திருப்பி அனுப்பியதாக கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள எம்.பி வெங்கடேசன் ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் உள்ள சென்னை தேர்வாளர்களை அந்த 51 பணியிடங்களுக்கு நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். தேவைப்பட்டால் இதில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad