Header Ads

  • சற்று முன்

    ’மகான்’ படத்திலிருந்து ‘சூறையாட்டம்’ பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்...

     


    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மகான்’. ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தை அடுத்து இந்தப்படத்தில் தனது அப்பாவுடன் இணைந்து நடிக்கிறார் துருவ்.  மேலும் மகான் படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தில் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 


     

    இந்தப்படத்திற்கு  சந்தோஷ் நாராயணன்  இசையமைத்துள்ளார். ஸ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளையும்,  விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும் செய்துள்ளனர்.   ஏற்கெனவே மகான் படத்திலிருந்து விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறது. 


     

    மகான் படத்திலும் துருவ் , விக்ரமின் மகனாக ’தாதா’ எனும் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது மகான் படத்திலிருந்து  “சூறையாட்டம்” எனத் தொடங்கும் பாடலின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியாகியிருக்கிறது.  

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad