Header Ads

  • சற்று முன்

    அரசுப் பணியில் பெண்களுக்கு மட்டும் இடஒதுக்கீடா?? - கொந்தளிக்கும் ஆண்கள்...

     


    2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக திமுக அறிவித்திருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்தபின் பல்வேறு அசத்தலான திட்டங்களையும் அறிவித்து வருகிறது. அதில் ஒன்றுதான்  பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40% உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு. 

     அந்தவகையில் கடந்த 13 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற மனிதவள மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கையில், “ அரசுப் பணியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30% லிருந்து 40% ஆக உயர்த்தப்படும்” எனஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெண்கள் பெறும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். 

    ஆனால், ஆண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #JusticeForMenInTNPSC என்ற ஹேஷ்டேகை பதிவிட்டு தங்களது எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், முதல்வர் தனிப்பிரிவுக்கு மனுவும் அனுப்பியுள்ளனர். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், நல்ல முடிவு எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


     

    மேலும், முதல்வருக்கு அனைத்து இளைஞர்களும் மனு அனுப்புமாறு கடிதம் ஒன்றும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதில், 

     மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம்..

    2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

    தாங்கள் 2021 சட்டமன்ற தேர்தலில் தாங்கள் வெற்றிபெற்றால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மற்றும் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு 30%லிருந்து 40% ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். அதற்கு நான் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  ஆனால் தற்பொழுது உள்ள நடைமுறையில் பெண்களுக்கு 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு இல்லாமல்,  பொது இட ஒதுக்கீடு (open quata) மற்றும் இன வாரியான பொது இட ஒதுக்கீட்டையும் ( ST,SC,MBC,BC ) கணக்கில் எடுத்துக்கொண்டால் பெண்கள் 50 சதவீதத்திற்கும் கூடுதலான இடங்களைப் பெற்று வருகிறார்கள் என்பதே உண்மை நிலையாகும்.

     இந்நிலையில் மேலும் கூடுதலாக 10 %  சேர்த்து 40 % இட ஒதுக்கீடு செய்யும் பொழுது ஒட்டுமொத்தமாக சேர்த்து சுமார் 65% முதல் 75 % இடங்களை பெண்கள் பெறக்கூடும் . இதனால் அரசு வேலை பெறுவதில் ஆண்கள் வெகுவாக பாதிக்கும் சூழ்நிலை உருவாகும்.  ஆகவே தாங்கள் அருள்கூர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பாதிக்காத வகையில் இரு பிரிவினருக்கும் தலா 50 சதவீத இட ஒதுக்கீட்டை செய்தீர்களானால் நல்ல பலன் கிடைக்கும்.


     

     ஆகவே தாங்கள் அருள் கூர்ந்து அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையை கனிவுடன் பரிசீலனை செய்து, ஆண்கள் வெகுவாக பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் தங்களை இருகரம் கூப்பி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.  நன்றி” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.. 

    தற்போது  #JusticeForMenInTNPSC என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளது..

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad