Header Ads

  • சற்று முன்

    ”நீங்க டிவியில் பார்க்குறது ரொம்ப கம்மி” - சர்வைவர் ஷோவிலிருந்து வெளியேறிய ஸ்ருஷ்டி பதிவு..

     


     

    சமீபத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள ஒரு ரியாலிட்டி ஷோ என்றால், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சர்வைவர் நிகழ்ச்சியைச் சொல்லலாம்.. நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி,  மற்ற நிகழ்ச்சிகளிலிருந்து  முற்றிலும் மாறுபட்ட களமாக அமைந்திருக்கிறது. 

    நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 18 பிரபலங்களும் ஆப்ரிக்காவில் உள்ள தீவு ஒன்றில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியுலக தொடர்பு இல்லாமல், அங்கே இருக்கும் பொருட்களை வைத்து அவர்கள் அந்தத் தீவில் சர்வைவ் பண்ண வேண்டும்..   கடுமையான போட்டிகள், டஃப் கொடுக்கும் போட்டியாளர்கள் என நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருப்பதால் ரசிகர்களை  வெகுவாக கவர்ந்திருக்கிறது. 


     

    இந்தப்போட்டியிலிருந்து முதலில் எலிமினேட் ஆகி வெளியே வந்திருப்பவர் ஸ்ருஷ்டி . இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது குறித்து ஸ்ருஷ்டி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “ சர்வைவர் ரியாலிட்டி ஷோவில் நீங்கள் பார்ப்பது மிகவும் குறைவு தான்.. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களுமே பாராட்டப்பட வேண்டியவர்கள். 

    இங்கே உடலும், மனமும் இணைந்து செயல்படவேண்டியது மிக அவசியம். நான் சர்வைவர் நிகழ்ச்சியில் கற்றுகொண்ட அற்புதமான விஷயம் என்னவென்றால், நம்மிடம் இருக்கும் சிறிய விஷயங்களை பாராட்டுவதோடு, நமக்கு இது வேண்டும் என்று விரும்புவதைத் தவிர்த்து, அதன்மீதான நம் பார்வையை மாற்ற வேண்டும் என்பது தான். 



     தோல்விகள் ஒன்றும் தோல்விகள் அல்ல, அதில் கிடைக்கும் அனுபவம் நம்மை சிறப்பான முறையில் முன்னோக்கிச் செலுத்தும். நான் உடங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை இழந்தது வருத்தமே.ஒரு பயணத்தின் முடிவு என்பது அடுத்த செயலின் தொடக்கம்.. உங்களது அன்பிற்கு நன்றி.. அர்ஜுன் சார் சொல்வது போல் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு “ என்று குறிப்பிட்டுள்ளார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad