Header Ads

  • சற்று முன்

    முட்டை விலை மீண்டும் உயர்வு...!

     

     


     உணவுப் பொருட்களில் அத்தியாவசியமாகிவிட்ட ஒருபொருள் முட்டை.. முட்டையின் விலை எப்போதும் ஏற்ற இறக்கமாகவே இருந்து வரும். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முட்டை விலை சரியத்தொடங்கியது. கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் முட்டை விலை குறைந்தது. இடையில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. 

    இந்நிலையில் , நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை விலை ரூ.4.20 லிருந்து 10 காசுகள் உயர்ந்து ரூ.4.30 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதிக்கு தற்போது தான் முட்டை விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

     



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad