Header Ads

  • சற்று முன்

    தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை..! சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு..!!

     


    கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் சரிவைக் கண்ட தங்கம் விலை அடுத்த 2 வாரங்களிலேயே மளமளவென உயர்ந்தது. நேற்று தங்கம் விலை பெரிதளவில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.35,608 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று அதிரடியாக சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது. 

    அதாவது இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 4,496 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சவரனுக்கு ரூ360 உயர்ந்து ரூ.35,968க்கு விற்பனையாகிறது.  

    மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 60 காசுகள் அதிகரித்து , ஒரு கிராம் வெள்ளி 69.60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad