Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு....

     

     



     தமிழகத்தில் நேற்று பிற்பகல் முதலே பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்தித்தனர். இந்நிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    அதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 


     

    குறிப்பாக நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (செப். 3) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று ( வெள்ளிக்கிழமை) அந்தப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  மேலும், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், செப். 6 ஆம் தேதி வரை இந்தப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad