Header Ads

  • சற்று முன்

    ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நடிகை கங்கனா...

     


    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் ’தலைவி’. இதில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில், நடித்து வருபவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.    ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில்  எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடிக்கிறார்.  

    படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தலைவி படம் வரும் (செப்டம்பர்) 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனையொட்டி நடிகை கங்கனா ரனாவத், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள்  முதலமைச்சர்கள்  ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 



    இந்நிகழ்வின்போது தலைவி பட இயக்குநர் ஏ.எல்.விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் உடனிருந்தனர். தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  கருணாநிதி நினைவிடத்திலும் கங்கனா மரியாதை செலுத்தினார். ஆனால் கங்கனா கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய காட்சிகள் எடுக்க பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை. 




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad