Header Ads

  • சற்று முன்

    உத்திரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் அருகே பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு.!!!

     

    உத்திரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் அருகே பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

    கடந்த சில நாட்களாகவே உத்திரகாண்ட் மாநிலத்தில் அதிகளவு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பலவேறு பகுதிகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழை காரணமாக நீர் தாழ்வான பகுதிக்கு செல்வதாள் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. அத்துடன் கனமழை காரணமாக நில சரிவு ஏற்பட்டு இதுவரை 79-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மீட்பு பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதனை அடுத்து உத்திரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் சக்ரதா தாலுக்காவில் புல்ஹாத்-பைலா சாலையில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12-பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3-பேர் காயங்களுடன் மீட்கபட்டு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இதைபற்றி தகவலறிந்த காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad