Header Ads

  • சற்று முன்

    மாரத்தான் ஓட்டத்தில் 20 மாநிலங்களில் ஓடி புதிய சாதனை. மேலும் 37 மாநிலங்களில் ஓட வேண்டும் என்று மா.சுப்பிரமணியனின் இலக்கு"

     

    •             "தான் வாழ்ந்த 95 ஆண்டுகாலமும் யோகா உடற்பயிற்சியில் ஈடுபட்டு தமிழக இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி " என்று மா.சுப்பிரமணியன் புகழாரம் சூட்டியுள்ளார்.
    •              ட்ரீம் ரன்னர்ஸ் அமைப்பு சார்பாக நடைபெற்ற 21.1 கி.மீ மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று முடித்த பின்னர்  சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலையருகே செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் .
    •        " உடற்பயிற்சியில் தமிழக இளைஞர்களுக்கு முன்மாதிரி , உந்துதலாக இருந்தவர் கருணாநிதி. தான் வாழ்ந்த  95 ஆண்டுகாலமும் யோகா , மூச்சு பயிற்சி , உடற்பயிற்சியில் அவர்  ஈடுபட்டார். அவர் வழியில் வீட்டிலேயே உடற்பயிற்சி கூடம் முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்துள்ளார்.

                                            

    •          20 ஆண்டுகளுக்கு மேலாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நான் 2004 ல் பெரிய விபத்தில் சிக்கினேன். அதன்பிறகு வாழ்நாள் முழுவதும் என்னால்  வேகமாக ஓட முடியாது , சம்மனமிட்டு அமர முடியும் என்றார்கள். அதை சவாலாக ஏற்று தற்போது மாரத்ரன்களில் ஓடி வருகிறேன்.
    •             2015 ல் ஆரோவில்லில் ஓடத் தொடங்கி இன்று வரை ஓடி வருகிறேன். லண்டன் , இத்தாலி நார்வே ஆஸ்திரேலிய 12 நாடுகளில் ஓடியிருக்கிறேன். இந்தியாவின் 20 மாநிலங்களில் ஓடியுள்ள நிலையில்  ,  37 மாநிலங்களிலும் ஓட வேண்டும் என்பதே எனது இலக்கு. ஊரடங்கு காலத்தில் வீட்டு மாடியிலேயே ஓடி ஆசிய சாதனை படைத்தேன். இந்திய புக் ஆப் ரெக்கார்ட் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளேன். என்னை முன்மாதிரியாக ஏற்றுள்ளதாக பல இளைஞர்கள் கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாரத்தனை நடத்திய ட்ரீம் ரன்னர்ஸ் அமைப்பு செயற்கை கால் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    •      இன்று 2மணி நேரம் 20 நிமிடத்தில் 21 கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளோம் என்று கூறினார்.

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad