Header Ads

  • சற்று முன்

    பொறியியல் கலந்தாய்வில் 222 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை - 14 கல்லூரிகளில் 50% இடம் மட்டுமே நிரம்பியது...

     





    14 கல்லூரிகளில் 50% இடம் மட்டுமே நிரம்பியது...

         பொறியியல் கலந்தாய்வு  பொதுப்பிரிவின் முதல் சுற்றில்   தங்களுக்கான இடங்களை தேர்வு செய்த 10>148 மாணவர்களுக்கான சேர்க்கை ஆணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

         அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. நடப்பு கல்வியாண்டில் 1>47>807 இடங்களுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது. 

         கடந்த 15ம் தேதி தொடங்கிய சிறப்பு பிரிவு கலந்தாய்வில்  5>972 அரசுப்பள்ளி மாணவர்களும் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்  விளையாட்டு வீரர்கள் என 470 பேரும் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

         தொடர்ந்து கடந்த 27ம்  தேதி தொடங்கி பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.  பொது கலந்தாய்வில் முதல் சுற்றில் 14>788 மாணவர்கள் அழைக்கப்பட்ட நிலையில் அதில் கலந்துகொண்டு இடங்களை தேர்வு செய்த 10>148 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

    கணினி அறிவியலுக்கு வரவேற்பு:

     


        பொதுக் கலந்தாய்வின் முதல் சுற்றில் கணினி அறிவியல் துறையை 2500 மாணவர்களும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையை 1500 மாணவர்களும் தகவல் தொழில்நுட்பத்தை 900 மாணவர்களும் தேர்வு செய்துள்ளனர். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை  செயற்கை நுண்ணறிவியல்  இயந்திரவியல் ஆகிய துறைகள் மாணவர்களின் அடுத்த விருப்பமாக உள்ளது.

         இன்றைய நிலவரப்படி கிண்டி அண்ணா பல்கலை வளாகம் உட்பட 9 அரசு கல்லூரிகள் 5 தன்னாட்சிக் கல்லூரிகள் என 14 கல்லூரிகளில் மட்டுமே 50% மேல் இடங்கள் நிரம்பியுள்ளது. 50 கல்லூரிகளில் இரட்டை இலக்கத்தில் இடங்களும் 126 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இடங்கள் நிரம்பியுள்ளது.  222 கல்லூரிகளில் ஒரு இடங்களைக் கூட மாணவர்கள் தேர்வு செய்யவில்லை.

         செப்டம்பர் 27 தொடங்கிய பொதுப்பிரிவு கலந்தாய்வு அக்டோபர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad