Header Ads

  • சற்று முன்

    ரூ.25 லட்சம் மோசடி செய்த நபர்.. மைத்துனரை கட்டிவைத்து உதைத்த மக்கள்..

     


     சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த கிறிஸ்துராஜ் என்பவர்  சிட்ஃபண்ட்ஸ் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவரிடம் பலர் பணம் கட்டி வந்துள்ள நிலையில் கிருஸ்துராஜ் சுமார் ரூ.25 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். 

    இவரிடம் பணம் கட்டி ஏமாந்துபோன 17 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கிறிஸ்துராஜ் திருவல்லிக்கேணியில் உள்ள தனது மைத்துனர் சஜினின் உணவகத்திற்கு அடிக்கடி வந்து செல்வதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

    இதனையடுத்து, நேற்று உணவகத்திற்கு வந்த சஜினை பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கடத்திச் சென்று சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதற்கிடையே உணவக ஊழியர் ஒருவர், முதலாளி சஜினி சிலர் கடத்திச் சென்றதாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். 

    அதன்பேரில் விசாரணை நடத்திய திருவல்லிக்கேணி காவல் துறையினர் , புதுப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஹக்கீம், மோகன்ராஜ், ராஜா உசேன், கொளத்தூரைச் சேர்ந்த முகமது சுல்தான் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad