Header Ads

  • சற்று முன்

    விண்ணப்பித்த 3 தினங்களில் கட்டிட அனுமதி... நகர்புற உள்ளாட்சி நிர்வாகம் ஆணை.

     



          நகராட்சி, மாநகராட்சியில் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி பெறுவதற்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

         நகர்புற உள்ளாட்சிகளில் கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதிக்கான நடைமுறையை எளிமைப்படுத்த "தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் - 2019" ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதியினை உரிய காலத்திற்குள் வழங்கிட நகராட்சி மற்றும் மாநகராட்சி பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

     


        அதன்படி, பொதுமக்கள் கட்டட விண்ணப்பங்களையும், இணைப்பு ஆவணங்களையும் காகிதமற்ற முறையில்  இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக சமர்ப்பிக்கும் முறை முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது

         பொதுமக்கள் சமர்பித்த ஆவணங்கள் சரியாக இருப்பின் விண்ணப்பித்த 3 தினங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு கட்டடம் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தவறும் நபர்கள் மீது விதிகளின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

         இவ்வாறு அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad