Header Ads

  • சற்று முன்

    பெங்களூர் சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை... விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைப்பு

     


         பெங்களூர் சிறையில் சசிகலா லஞ்சம் கொடுத்து சொகுசு வசதி பெற்ற வழக்கை , சிபிஐ விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நான்கு வாரங்களுக்கு ஒத்திவைப்பு. அதே வழக்கில் உள்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக 4 வாரங்கள் அவகாசம்.

         சசிகலா அவர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தபோது லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் உரிய முறையில் விசாரிக்க வில்லை ஆகையால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கில் இரண்டு வருடங்களுக்கு பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

           கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறைத்துறை அதிகாரிகள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில் இது குறித்து விளக்கமளிக்க கர்நாடக உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உள்துறை செயலாளர் மாமனார் உயிரிழந்த காரணத்தினால் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை எனவும் இந்த வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை 4 வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு ஒத்தி வைத்தார்.

     

     

     

     

     

     

     

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad