Header Ads

  • சற்று முன்

    4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் அமைச்சர் மகன் ஆசிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜர்...

     

     

    அஜய் மிஸ்ரா

     மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் பகுதி விவசாயிகளும் பங்கேற்றனர். கடந்த 3 ஆம் தேதி (அக்.3) லக்கிம்பூர் , கெரி அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 

    இதனையடுத்து லக்கிம்பூர் பகுதி விவசாயிகள்  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது காரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  அப்போது அவ்வழியே வேகமாக வந்த கார் ஒன்று விவசாயிகள் மீது மோதி நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் 4 விவசாயிகள், 1 பத்திரிக்கையாளார் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 13பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

    இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிச்சென்றது, அஜய் மிஸ்ராவின் மகன், ஆசிஷ் மிஸ்ரா என கூறப்படுகிறது. இது தொடர்பாக 2 தினங்களுக்கு முன்  ஆசிஷ் மிஸ்ராவுக்கு சம்மன்  அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.. ஆசிஷ் மிஸ்ராவை ஏன் கைது செய்யவில்லை என நேற்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருந்தது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்குள் ஆஜராகவில்லை என்றால் சட்டப்பீர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என 2வது சம்மன் அனுப்பப்பட்ட சூழலில், ஆசிஷ் மிஸ்ரா இன்று ஆஜராகியிருக்கிறார். 



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad