Header Ads

  • சற்று முன்

    ஆப்கானிஸ்தான் : மசூதியில் குண்டுவெடிப்பு.. 50க்கும் மேற்பட்டோர் பலி..

     


    ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஆப்கனில் அதிபர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு,தாலிபன்கள் வசமானைதை அடுத்து அந்நாட்டிலிருந்து அமெரிக்க படைகளும் வெளியேறியது. இதனைத்தொடர்ந்து முழுவதுமாக  தாலிபன்பன்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்ற ஆப்கனில் அவ்வப்போது குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இந்நிலையில் குந்தூஸ் பகுதியில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதியில் வெள்ளிக்கிழமை வழிபாட்டின்போது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.  இந்த சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

    இந்த கோர சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பு பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் சமீப காலமாக   ஐ.எஸ் அமைப்பே தொடர்ச்சியாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad