Header Ads

  • சற்று முன்

    மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெறும் அமெரிக்க விஞ்ஞானிகள்...

     


     

    2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு யாருக்கு என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கடந்த ஆண்டு இத்துறைக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளான  ஹார்வி ஜே.ஆல்டெர், சார்ல்ஸ் எம். ரைஸ் மற்றும்  பிரிட்டிஷ் விஞ்ஞானி மிஷெல் ஹோட்டன் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது. 

    அதேபோல் இந்த ஆண்டும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது. டேவிட் ஜூலியஸ் (David Julius)  மற்றும் ஆடம் பட்டாபவுடியன் (Ardem Patapoutian) ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்பட உள்ளது. 

    இவர்களுக்கு வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் ஆகியவை நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும், அவை அனுப்பு சமிக்ஞைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சிக்காகவே அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த ஆய்வின் மூலம் நம்மை சுற்றியுள்ள இந்த உலகிற்கு நம் உடல் எவ்வாறு பழகிக் கொள்கிறது என்பது குறித்து ஆழமான புரிதல் ஏற்படுகிறது எனவும், அன்றாட வாழ்வில் இந்த உணர்வுகளை நாம் பெரிதும் பொருட்படுத்துவது இல்லை என்றும், பல முக்கிய கேள்விகளுக்கு இந்த ஆய்வில் பதில் கிடைத்துள்ளதாகவும் நோபல் பரிசு தேர்வு குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

     

     

    .

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad