Header Ads

  • சற்று முன்

    கன்டெய்னர் லாரிகளால் ஏற்படும் விபத்து... நீதிமன்றம் ஆலோசனை.


     


        கன்டெய்னர் லாரிகள் ஏற்படக்கூடிய விபத்தை தடுக்க காவல் துறை போக்குவரத்துத் துறை அடங்கிய குழுவை அமைத்து மாதந்தோறும் அறிக்கை அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     


        சென்னையை சேர்ந்த ஜே.எஸ் துறைமுக கன்சார்டியம் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடங்கி இருந்தது. அந்த வழக்கில் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய துறை முகங்களுக்கு வரக்கூடிய கண்டெய்னர் லாரிகள் எடையை அதிக அளவு எடுத்து வருவதாகவும் அதனால் பல இடங்களில் விபத்து ஏற்படுவதை சுட்டிக்காட்டி உள்ளார். குறிப்பாக ஆறு சக்கர வாகனம் கொண்ட கண்டெய்னர் லாரிகள் 13.5 டன் எடை அளவு கொடுக்க வேண்டும் என்றும் அதே போல பன்னிரண்டு சக்கரம் கொண்ட லாரிகள் 12.45 ஒருவருடன் எடை அளவு கொண்டு கொண்டிருக்க வேண்டும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட இடத்தை ஆண்டு கண்டெய்னர் லாரிகள் அதிக பாரத்தை ஏற்றி செல்வதனால் பல இடங்களில் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பலர் பாதிப்படைவதாகவும் அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

     

        இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அதிக எடை ஏற்றிக்கொண்டு வரும் லாரிகள் மீது, அதன் உரிமையாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை, போக்குவரத்துறை அடங்கிய துறை சார்பில்ஒரு குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad