Header Ads

  • சற்று முன்

    உ.பி விவசாயிகள் கொலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்! - முதலமைச்சராக நீடிக்க யோகி ஆதித்யநாத் தகுதி இழந்து விட்டார் - டி.ராஜா பேட்டி.

     



         இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் கடந்த 2ம் தேதி முதல் 4 வரை டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதாவது நடைபெற்று முடிந்த கூட்டத்தில் 2022ம் ஆண்டு  நடைபெறவுள்ள  உத்திரபிரதேசம் பஞ்சாப் மணிப்பூர் கோவா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்றார். மேலும்  மேற்கண்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த கட்சி பாகுபாடின்றி ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.

         மேலும் உ.பி மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டத்தை கண்டித்து வரும் 11ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும். இதில் தொடர்புடைய உள்துறை இணை அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் இன்றைய அளவும் நீடிக்க காரணமாக உள்ள மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

        இவை தவிர அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு> நாட்டின் பொது சொத்துக்களை விற்பது  நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்தல் மற்றும் தலித் சிறுபான்மையினர் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாகவும் அரசியல் அமைப்பு மற்றும் சமூக நீதியை பாதுகாக்கும் வகையில் நவம்பர் 26 முதல் டிசம்பர் 6 வரை  நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில்  பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் "இந்துத்துவா கொள்கைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளவும் முடிவு செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.  நாட்டின் சில முதலாளிகளை காப்பாற்றும் வகையில் அரசின் செயல்பாடு உள்ளது எனவும் ஆனால் காப்பாற்ற பட வேண்டிய விவசாயிகளை அரசு கைவிட்டு விட்டது!! என்பதற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கபட்டுள்ளது.  

        2022ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  24வது தேசிய மாநாடு அக்டோபர் 14 முதல் 18 வரை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறவுள்ள நிலையில் அவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

     

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

     


    1. உ.பி லக்கிம்பூர் வன்முறைக்கு எதிராக தீர்மானம். 

    2. அரசின் சொத்துக்களை விற்று பணமாக்கும் திட்டம் மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக தீர்மானம்.

    3. தேசிய புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தீர்மானம். 

      இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜா பேசியதாவது உத்தரபிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்ற கொடூரத்திற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. 11ம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் நடத்தப்படும் என்றார். இவற்றிக்கு எல்லாம் தொடக்கமாக உள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசை கேட்டு கொண்டார்.

       காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி கைது செய்யபட்தற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவிக்கிறது எனவும்  லக்கிம்பூர் மாவட்டம் முடக்கப்பட்ட இருபது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றார்.  தலித் சிறுபான்மையினர் மற்றும் விவசாயிகள் எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதனால் உ.பி. மாநில முதலமைச்சர் பதவியில் நீடிக்க யோகி ஆதித்ய நாத் தகுதியற்றவர் என தெரிவித்தார்.

     

     

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad