Header Ads

  • சற்று முன்

    பள்ளிக்கு சென்று ஆசிரியையின் கழுத்தில் கத்திவைத்து நகை பறிப்பு.!!

     


    கோவை பி.கே.கே மேனன் ரோடு வெங்கடசாமி லே அவுட்டைச் சேர்ந்தவர் அன்புக்கரசி. இவர் கோவை சின்னசாமி சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பனியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அன்புக்கரசி ஆசிரியர் ஓய்வு அறையில் இருந்துள்ளார் அப்பொழுது 35 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் பள்ளிக்கு சென்று அவர் ஆசிரியர் அன்புகரசியை நேராக சந்தித்து எனது மகனை இப்பள்ளியில் சேர்ப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை எனக் கேட்டு விசாரித்துள்ளார்.

    ஆசிரியையும் உண்மையாகவே தன்னுடைய மகனை சேர்ப்பதற்காகதான் கேட்கிறார் என நினைத்துக் கொண்டு பள்ளியில் சேர்ப்பதற்கான விதிமுறைகளை கூறிக்கொண்டிருந்தார்.அப்போது அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை கழுத்தில் வைத்து நகைகளை தரவில்லை என்றால் கத்தியால் குத்திக் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார் செய்வதறியாது திகைத்து நின்ற ஆசிரியை உயிர்க்கு பயந்து தான் அணிந்திருந்த தாலிக்கொடி, மோதிரம், வளையல் என பத்தரை சவரன் தங்க நகைகளை கழற்றிகொடுத்துள்ளார்.

    இதையடுத்து கொள்ளையன் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளான். கூச்சலிட்ட அசிரியை மற்ற அசிரியர்கள் வருவதற்குள் அவன் தலைமறைவாகிவிட்டான். ஆசிரியை அன்புக்கரசி காட்டூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் பட்டபகலில் நடந்துள்ளதால் அங்கு உள்ள ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையன் முகம் பதிவாகியுள்ள நிலையில் போலீசார் ரகசிய தேடுதல் வேட்டை நடத்துவதாக கூறி காட்சிகளை வெளியிட மறுத்துவிட்டனர்.

    .

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad