Header Ads

  • சற்று முன்

    தான் பெற்ற மகளையே கழுத்தை அறுத்து கொன்ற தந்தை- சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!!!


    சென்னை வில்லிவாக்கம், ரெட்ஹில்ஸ் சாலை,ஜந்தாவது தெருவை சேர்ந்தவர் லாவண்யா இவர் செவிலியராக பணியாற்றுகிறார். இவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகள், மகன் என இரு பிள்ளைகள் உள்ளனர். பின்பு ஒரு கட்டத்தில் இவர்களது திருமண வாழ்கை கசந்துபோன நிலையில் இருவரும் தினித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

     

    இந்நிலையில் லாவண்யா வேலைக்கு செல்லும்போது பிள்ளைகளை விட்டில் விட்டு செல்வது வழக்கம். இன்றும் வழ்க்கம் போல் லாவண்யா வேலைக்கு செல்ல இரவு நேரம் பார்த்து ராதாகிருஷ்ணன் விட்டிற்கு சென்றுள்ளார். அப்போது லாவண்யா இல்லாத நிலையில் தனது 7 வயது மகளான ஸ்ரீ-யிடம் லாவண்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு லாவண்யாவை பற்றி விசாரித்துள்ளார். அவர் பதில் ஏதும் தெரிவிக்காத நிலையில் காய்கறி நறுக்கும் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.

    சிறுமி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனை பார்த்த ராதாகிருஷ்ணன் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். பிறகு சிறுமியை மீட்டு கொளத்தூர் பெரியார் நகர் புற மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் சிறுமி இறந்து விட்டதாக தெறிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad