Header Ads

  • சற்று முன்

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார் பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய்...

     

     சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு இன்று  சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மூத்த நீதிபதி டி.எஸ் சிவஞானம் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

     நீதிபதி பரேஷ் ரவிசங்கர் 1996 ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றத்தில்  வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் , 2013 ஆம் ஆண்டு நிரந்த நீதிபதியானார். குஜராத் உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்து வரும் அவர், தற்போது சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். 

    இரு வாரங்களுக்கு முன்பு நாடு முழுவதும் 60 க்கும் மேற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்து உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.  அதனடிப்படையிலேயே தற்போது இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தை பொறுத்தவரை இன்னும் 10 நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

     உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள பரிந்துரைக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தபின் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 75 ஆகும், தற்போது தலைமை நீதிபதியோடு சேர்த்து 56 நீதிபதிகள் உள்ளனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad