Header Ads

  • சற்று முன்

    ஏர் இந்தியாவை வாங்கிய டாடா நிறுவனம்.. எத்தனை கோடிக்கு தெரியுமா??

     



    ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18 ஆயிரம் கோடிக்கு டாடா சன்ஸின் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் வாங்கியுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 

    டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம், அரசுடமையாக்கப்பட்டு அரை நூற்றாண்டுக்குப் பின்னர் மீண்டும் டாடா-வின் கைவசம் வந்துள்ளது. கடந்த 1953 ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. தற்போது அந்நிறுவனம் கடும் நஷ்டத்தில் சிக்கி தவித்து வருகிறது. 

    வருவாய் இழப்பு காரணமாக கடந்த 2001 ஆம் ஆண்டு முதலே ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.  கடன் பிரச்னை காரணமாக அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. அதோடு கொரோனா பெருந்தொற்று காரணமாக சேவை பாதிப்பு, வாருவாய் இழப்பு என ஏர் இந்தியாவின் நிலை மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டது.  அதனைத் தொடர்ந்து ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சி தீவிரமானது. 

     

     அதற்காக ஏலம் விடப்பட்டபோது, டாடா சன்ஸ் நிறுவனம் வாங்க விருப்பம் தெரிவித்தது.இந்நிலையில் இன்று டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் , ஏர் இந்தியாவை ஏலத்தில் வாங்கியுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 

    அரசு அறிவித்திருந்த ஆரம்ப ஏலத்தொகை ரூ.12,906 கோடி.. ஆனால் டாடா நிறுவனம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது. இதில் ரூ.15,300 கோடி ஏர் இந்தியாவின் கடனுக்கான பாகமாகும். மீதமுள்ள தொகை மத்திய அரசுக்கு செலுத்தப்படும் என கூறப்படுகிறது. 


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad