Header Ads

  • சற்று முன்

    பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு அசால்ட்டாக தப்பிய நபர்... வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..


     

    டெல்லியில் வாங்கிய பொருளுக்கு பணம் கொடுக்குமாறு கேட்டதற்காக, பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. 

    டெல்லி தாப்ரி பகுதியில் உள்ள சோம் பஜார் சாலையில் மளிகை கடை நடத்தி வந்தவர் விபா. 30 வயதான விபாவிற்கு 2 குழந்தைகள்  உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பதிவான சிசிடிவி காட்சியில், விபாவிடம்   ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர் தான் கையில் வைத்திருந்த பையை கீழே வைத்துவிட்டு அதிலிருந்த கத்தியை எடுத்து விபாவின் கழுத்தை அறுத்து கொலை செய்கிறார். பின்னர் மீண்டும் தன் பையை எடுத்துகொண்டு அங்கிருந்து நிதானமாகச் தப்பிச் செல்கிறார். 

    அருகிலிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று நிதானிப்பதற்குள்ளாக இந்த சம்பவம் நடந்தேறியது. பின்னர் அவர்கள் விபாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.  அதனைதொடர்ந்து தப்பியோடிய நபரை பிடித்து சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.. 

    விசாரணையில் அவர் பெயர் திலிப் (44) என்பதும், அவர் மதுபோதையில் விபாவிடம் சிகரெட் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். பணம் கேட்டு விபா வாக்குவாதத்தில்  ஈடுபட்டதால் அவரை கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். தொடர்ந்து காவல் துறையினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad