Header Ads

  • சற்று முன்

    ஆம்புலன்ஸ் சைரன் ஒலி வெறுப்பாக இருக்கிறது.. இனி இந்திய இசையை ஒலிக்க வைக்க விரைவில் சட்டம் - நிதின் கட்கரி..

     


    சாலைகளில் செல்லும்போது வாகனங்களின் இரைச்சல், ஹாரன் ஒலி போன்றவற்றால்  தலைவலியே வந்துவிடும்.. அதுவும் டிராஃபிக்கில் சிக்கிக்கொண்டால் சொல்லவே வேண்டாம், மீண்டு வருவதற்குள் ஒரு வழியாகிவிடுவோம். ஆனால் இனி ஹாரன் ஒலிகளால் அவதிப்பட வேண்டாம் எனவும், வாகனங்களில் இந்திய இசைக்கருவிகளின் இசை மட்டுமே இருக்குமாறு விரைவில் சட்டம் இயற்ற திட்டமிட்டு வருவதாகவும் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  

    நாசிக்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், இந்தியாவில்  ஓடும் வாகனங்களில் இனி இந்திய இசைக்கருவிகளான ஃப்ளூட், வயலின், ஹார்மோனியம் ஆகியவற்றின் இசை மூலம் ஹாரன் ஒலி இருக்குமாறு ஆய்வு செய்து வருவதாக கூறினார். விரைவில் இதுகுறித்து சட்டம் கொண்டுவரப்படும்  என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார். 

    காவல் துறையினர் பயன்படுத்தும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் சைரன் ஒலி, அமைச்சர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் ஒலி ஆகியவை ஒரே மாதிரி இருக்கின்றன. அவற்றை கேட்டாலே வெறுப்பாக இருக்கிறது.  அதனால் அவற்றை காதுகளுக்கு இனிமையான இசையாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். அதுவும் ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிக்கப்படும் இசை போன்று இருக்குமாறு ஆய்வு செய்து வருகிறோம் எனவும்  நிதின் கட்கரி கூறினார்.

     

     



     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad