Header Ads

  • சற்று முன்

    ”என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் தான் நிறைய கற்றுகொண்டேன்”- மனம் திறந்த ஜோதிகா...

     


    ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கணி,  கலையரசன், சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “உடன்பிறப்பே”. அக்டோபர் 14 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள இந்தப்படத்தை இரா. சரவணன் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள ட்ரெய்லர், ஒரே நாளில் 39 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

    இதில் சசிக்குமாருக்கு தங்கையாக ஜோதிகா நடித்திருக்கிறார். அவருக்கு கணவராக சமுத்திரக்கணி வருகிறார். அண்ணனா?? கணவரா?? என பாசப்போராட்டத்தில் சிக்கும் கிராமத்து குடும்பப் பெண்ணாக வருகிறார் ஜோதிகா. ‘உடன்பிறப்பே’ ஜோதிகாவிற்கு 50 ஆவது படமாகும். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் காணொளி வாயிலாக பங்கேற்ற ஜோதிகா,  90% பெண்களின் வாழ்க்கையை இந்தப் படத்தில் பிரதிபலித்திருப்பதாக தெரிவித்தார்.  



    மேலும் அவர் பேசியதாவது, “ எனது திரைப்பயணம் மிகவும் எளிமையானது. பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்றே நினைத்தேன். என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் தான் நிறைய கற்றுக்கொண்டேன். புது இயக்குநர்கள், புது கதைகள் என கடந்த 8 ஆண்டுகள் மிகவும் அழகானது. பெண்கள், குடும்பத்தினர் அனைவருமே பெருமைப்படும்படியான படங்களில் நடிக்க விரும்புகிறேன். இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இயக்குநர் சரவணன் சாருக்கு பெரிய நன்றி” என்று கூறினார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad