Header Ads

  • சற்று முன்

    பாலியல் வன்கொடுமை வழக்கில் யோகா பயிற்சியாளர் கைது...

     


    சென்னையில் யோகா பயிற்சியாளராக இருந்து வருபவர் யோகராஜ். இவர் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவத்துறையில் பணியாற்றி வரும் அந்த 21 வயது இளம் பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். 

    அதில், யோகா பயிற்சியாளர் யோகராஜ் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் திருப்பூர், மும்பை, ஹாங்காங் போன்ற இடங்களிலும் யோகராஜ் மீது பாலியல் புகார் இருப்பதாக  குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் தி.நகர் அனைத்து மகளிர்  காவல் துறையினர் யோகராஜ் என்கிற பூவேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad