Header Ads

  • சற்று முன்

    நிவின்பாலியுடன் இணைந்த இயக்குநர் ராம்... மாநாடு தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு...

     


    மாநாடு படத்தைத் தொடர்ந்து  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனது அடுத்த படத்திற்காக   இயக்குனர் ராம் உடன் இணைந்திருக்கிறார்.  நிவின்பாலி - அஞ்சலி நடிப்பில் உருவாக இருக்கும் இந்தப்படம் தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் நடிகர் சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.  படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

    இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நேற்று தனுஷ்கோடியில் தொடங்கியது. அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ” நண்பர்களுக்கு வணக்கம்... மாநாடு படத்தைத் தொடர்ந்து மக்கள் இயக்குநர் ராம் இயக்கத்தில் புதிய படத்தில்  இணைந்துள்ளேன். 



    இந்தப்படத்தின்  படப்பிடிப்பை  தனுஷ்கோடியில் உங்கள்: அன்பினாலும் ஆசிகளாலும் தொடங்கியுள்ளோம். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸின் 7 வது படமாக உருவாகிறது. இந்தப்படத்தையும் உங்கள் மனதிற்கு நெருக்கமான படமாக விரைவில் கொண்டு வருவோம். உடனிருந்த அனைவருக்கும் நன்றி.. என்று குறிப்பிட்டுள்ளார். 




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad