Header Ads

  • சற்று முன்

    போராடுவதற்கு காரணமே இல்லை.. பாஜகவினர் போராட்டம் தேவையற்றது - சேகர்பாபு..



    தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களுக்கு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் சேகர் பாபு,  போராடுவதற்கு எந்த காரணமும் இல்லை என்பதால் தமிழக அரசின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம் நடத்துகிறார்கள் என விமர்சித்துள்ளார்.

     வள்ளலாரின் அவதாரத் திருநாளை முன்னிட்டு சென்னை ஏழு கிணறு பகுதியில் அமைந்துள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில், வள்ளலாரின் திருவுவப் படத்திற்கு அமைச்சர் சேகர்பாபு  மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஒன்றிய அரசின் அறிவுறுத்தல்படியே கோயில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது எனவும்,  கொரோனாவால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நிலை வரும்போது கோயில்கள் திறக்கப்படும்  என்றும் தெரிவித்தார். 

    மேலும், முதலமைச்சர் அதி வேகமாக மக்கள் நலப்பணிகளை செய்வதால் ஹெச்.ராஜா அவரை டேஞ்சரஸ் (Dangerous) என கூறியிருக்கலாம் என்றார். அதோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பதால்தான், நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி என அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். முதல்வரின் சிந்தனை சரியில்லை என்று கூறியவரின் சிந்தனை தான் சரியில்லை. அதனால் தான் அவரது கட்சியிலேயே அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad